Sat. May 3rd, 2025

ஆளுநரின் செயல்பாடுகள் கவலை கொடுக்கிறது – உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை!

ஆளுநரின் செயல்பாடுகள் கவலையளிக்கிறது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

பஞ்சாபில் அரசு மற்றும் ஆளுநரின் செயல்பாடுகள் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இரு தரப்பும் அரசியல் சாசனத்தை சீர்குலைக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப் ஆளுநரின் செயல்பாடுகள் மிக, மிக வேதனையளிக்கின்றன. மாநில அரசால் அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் எவ்வாறு கிடப்பில் போட முடியும். ஆளுநருக்கு இதுபோன்ற அதிகாரங்களை யார் கொடுத்தது?

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறும் வகையில் ஆளுநரின் நடவடிக்கை உள்ளது.