Sat. May 3rd, 2025

தூத்துக்குடியில் பச்சை நிறமாக மாறிய கடல்!

தூத்துக்குடியில் பச்சை நிறமாக மாறிய கடலைப் பார்த்து மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் கடற்கரை அருகே உள்ள மீன் அரவை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் கடற்பகுதி பச்சை நிறமாக மாறியது.

சிங்கி இறால் வளர்ப்பு முற்றிலும் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.