விஜய்யின் கனவு வெல்வதற்கு வாழ்த்துக்கள் – சீமான்

நடிகர் விஜய்யின் கனவு வெல்வதற்கு வாழ்த்துக்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
அரசியலுக்கு வர விரும்பும் நடிகர் விஜய்யின் கனவு வெல்வதற்கு வாழ்த்துகிறேன். விபத்து விதியாகிவிடாது. எம்ஜிஆரை போன்று அரசியலுக்கு வந்த உடன் வெற்றிபெறுவது எளிதல்ல. கட்சி தொடங்கிய உடன் வெற்றி பெற்றால் அது பெரும்புரட்சிதான் என்றார்.