Sat. May 3rd, 2025

நடிகர் ஜூனியர் பாலையா உயிரிழந்தார் – ரசிகர்கள் சோகம்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜூனியர் பாலையா. இவருக்கு வயது (70).

இவர் கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மூன்றாவது மகன் ஆவார்.

இந்நிலையில், வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் மூச்சு திணறல் காரணமாக இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.