Fri. May 2nd, 2025

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை
மத்திய இணை அமைச்சர் முரளிதரனிடம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வழங்கினார்.

அக்டோபர் மாதத்தில் மட்டும் 64 மீனவர்களை சிறைப்பிடித்ததுடன், 10 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அந்த கடிதத்தில் தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.