ஆந்திராவில் பயங்கர ரயில் விபத்து – உயிரிழந்தோர் 13 ஆக உயர்வு!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் அடுத்த கண்டகபள்ளி ரயில் நிலையம் அருகே பயங்கர ரயில் விபத்து நடைபெற்றுள்ளது.
சிக்னல் கோளாறு காரணமாக நின்று கொண்டிருந்த ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திரா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
விபத்தில் பலாசா ரயிலின் டிடிஆர், ராயகட்டா விரைவு ரயிலின் லோகோ பைலட் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக விஜயநகரம் எஸ்.பி.தீபிகா தெரிவித்துள்ளார்.
தற்போது, மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சமூகவலைத்தளங்களில் ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் ட்ரோன் காட்சிகள் வைரலாகி வருகின்றன.