Sat. Mar 7th, 2026

இபிஎஸ்தான் உண்மையான நாடகக்காரர் – உதயநிதி ஸ்டாலின் சாடல்!

இபிஎஸ்தான் உண்மையான நாடகக்காரர் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓபிஎஸ் நாடகக்காரர் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். கூவத்தூரில் சசிகலாவின் காலை பிடித்து பதவியை அடைந்தபின், காலை வாரிய இபிஎஸ்தான் உண்மையான நாடகக்காரர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகுதான தமிழ்நாட்டில் நீட் தேர்வு வந்தது. நீட்டுக்காக இணைந்து போரா அழைத்தபோது இபிஎஸ் அதை ஏற்கவில்லை என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!