Wed. May 7th, 2025

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி இன்று தொடங்கியது!

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா இன்று தொடங்கியுள்ளது.

முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் கணபதி ஹோமத்துடன் ஆன்மிக விழா தொடங்கியது

இன்று மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், 7 மணிக்கு தேவரின் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

நாளை பெண்கள் முளைப்பாரி எடுத்தும், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.

வரும் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார்.