Sat. Mar 7th, 2026

ஆளுநர் மாளிகை பாதுகாப்பில் எந்த குறைபாடும் கிடையாது – டிஜிபி சங்கர் ஜிவால்

ஆளுநர் மாளிகை பாதுகாப்பில் எந்த குறைபாடும் கிடையாது என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

கருக்கா வினோத் சாலையில் தான் பெட்ரோல் குண்டு விசினான். ஆளுநர் மாளிகை மீது வீசவில்லை. பெட்ரோல் குண்டு வீச முயன்ற கருக்கா வினோத் போலீசாரால் தடுக்கப்பட்டு பிடிக்கப்பட்டார். நந்தனத்திலிருந்து ஆளுநர் மாளிகை வரை கருக்கா வினோத் நடந்தே வந்துள்ளான்.

மயிலாடுத்துறை சம்பவத்தில் ஆளுநரை குறிவைத்து எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. சம்பவம் தொடர்பாக 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் வழக்குப் பதியவில்லை என கூறுவது தவறான தகவல்.

ஆளுநர் மாளிகையில் 253 காவலர்கள் பணியில் உள்ளனர். ஆளுநருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. எங்கு சென்றாலும் பாதுகாப்பு வழங்கிறோம். ஆளுநருக்கான பாதுகாப்பில் காவலர் பற்றாக்குறை என எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றார்.