Sat. May 3rd, 2025

பாஜக கொடிக்கம்பத்தை அகற்றிய விவகாரம் – 5 பேர் சிறையடைப்பு!

மாநகராட்சியிடம் முன் அனுமதி பெறாமல் கொடிக்கம்பத்தை நட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக புகார் வந்ததையடுத்து, கொடிக்கம்பத்தை அகற்றும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்ட போது பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது, பாஜகவினர் மாநகராட்சிக்கு சொந்தமான ஜே.சி.பி இயந்திரத்தை உடைத்தனர்.

இதுதொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 பேரை சிறையில் அடைத்துள்ளதாகவும் காவல்துறை விளக்கம் அளித்தார்.