Sat. Mar 7th, 2026

அதிமுக, பாஜகவும் நாணயமில்லாத நாணயத்தின் இரு பக்கங்கள் – மு.க.ஸ்டாலின் பேச்சு!

இன்று திமுக சமூகவலைத்தள தன்னார்வலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், 1000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்த ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. கோயில்களை இடித்துவிட்டதாக பொய்யான படங்களை வெளியிட்டு பாஜகவினர் அவதூறு பரப்புகின்றனர். பாஜகவினருக்கு தெரிந்த ஒரே யுனிவர்சிட்டி வாட்ஸ் ஆப் யுனிவர்சிட்டிதான்.

திராவிட இயக்கத்தை ஒழிப்பதாக கூறியவர்கள் கடையில் இங்கேதான் அடைக்கலமானார்கள். திமுகவை கற்பனையில் கூட யாராலும் அழிக்க முடியாது. அதிமுக, பாஜகவும் நாணயமில்லாத நாணயத்தின் இரு பக்கங்கள் என்றார்.