அண்ணாமலை வீட்டின் முன் இருந்த கொடிக்கம்பம் அகற்றம் – போலீசார், பாஜவினர் இடையே தள்ளுமுள்ளு!

அண்ணாமலை வீட்டின் முன் அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் அகற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த 45 அடி உயர கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.
கொடிக்கம்பம் வைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் இந்தக் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. அப்போது, போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கிரேன் கண்ணாடியை பாஜகவினர் உடைத்தனர். இதனையடுத்து பாஜகவினரை குண்டுக்கட்டையாக போலீசார் கைது செய்தனர்.