Sat. Mar 7th, 2026

ஜம்மு வைஷ்ணோ தேவி கோவிலில் குடியரசுத்தலைவர் சாமி தரிசனம்!

இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள குடியரசுத் தலைவர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவுடன் அங்கு சென்று பார்வையிட்டார்.

அப்போது, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலய வாரியத்தின் (SMVDSB) தலைமை நிர்வாக அதிகாரி அன்ஷுல் கர்க் முர்முவுக்கு திட்டங்கள் பற்றி விளக்கினார்.

தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஜம்முவில் உள்ள கத்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு சென்று சாமி தரிசனம் செய்தார்.