Mon. May 5th, 2025

இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி!

இன்று தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், 36 இஸ்லாமியர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிறையிலேயே உயிரிழந்துள்ளனர்.

வயது மூப்பு, உடல்நலக்குறைவை கருத்தில் கொண்டு பரிசீலனை செய்து அவர்களை விடுக்க வேண்டும் என்று பேசினார்.

மேலும், நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறை கைதிகளை விடுவிப்பது தொடர்பாக செல்வப்பெருந்தகை, ஜவாஹிருல்லா, வேல்முருகன், முகமது ஷா நவாஸ் உள்ளிட்டோர் விதி எண் 55ன் கீழ் சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.