Thu. Jul 23rd, 2026

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நேற்று சென்னையில் ஓரிரு இடங்களில் நல்ல மழை பெய்தது. தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.