Sat. May 3rd, 2025

ஆபாச வார்த்தை : விஜய்யின் லியோ படம் எதிராக காவல் ஆணையரகத்தில் புகார்!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக நடிகர் விஜய் வலம் வருகிறார். தற்போது நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

இதற்கிடையில் விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22ம் தேதி அன்று ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டனர். இப்பாடலை அனிருத், அசல் கோலார் பாடியுள்ளனர்.

மேலும், சமீபத்தில் ‘Badass’ வெளியானது. லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ஆனால், இந்த பட ட்ரெய்லரில் விஜய் பேசியுள்ள வார்த்தைகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், லியோ திரைப்பட குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

லியோ டிரைலரில் இடம்பெற்ற ஆபாச வார்த்தையை நீக்கக்கோரி அகில் பாரத் இந்து மகா சபா புகார் கொடுத்துள்ளது.