ஆசிய விளையாட்டு – 100வது பதக்கத்தை முத்தமிட்டது இந்தியா மாபெரும் சாதனை!

சீனாவில் நடைபெற்று வரும்ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 100வது பதக்கத்தை வென்று மாபெரும் சாதனைப் படைத்துள்ளது.
இதுவரை இந்தியா நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 25 தங்கமும், 35 வெள்ளியும், 40 வெண்கலம் என்று 100 பதங்களுடன் 4வது இடத்தை இந்தியா பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
ஜகர்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் 70 பதங்களை இந்தியா வென்றதே சாதனையாக இருந்த பட்சத்தில் தற்போது 100வது பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.