Fri. May 2nd, 2025

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

சமீப காலமாக போராட்டம் நடத்தி வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

சமவேலைக் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

இதனையடுத்து, இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.