நாய்க்குட்டிகளை தன் அம்மாவிற்கு பரிசளித்த ராகுல்காந்தி – வைரலாகும் வீடியோ!

நாய்க்குட்டிகளை தன் அம்மா சோனியாகாந்திற்கு ராகுல்காந்தி பரிசளித்தார்.
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் கோவாலிருந்து கொண்டு வரப்பட்ட நாய் குட்டிகளை தன் அம்மா சோனியா காந்திக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பரிசளித்தார். நாய்க்குட்டிகளைப் பார்த்த சோனியா காந்தி மிகவும் சந்தோஷத்தோடு அதை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு முத்தமிட்டார். இதைப் பார்த்த ராகுல்காந்தி தன் அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டார்.
தற்போது இந்த நெகிழ்ச்சியான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் மகிழ்ச்சி தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.