Sun. May 4th, 2025

கட்டுக்கட்டான பணத்தை ரோட்டில் வீசிய நபர் கைது – வைரலாகும் வீடியோ!

ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டுக்கட்டான பணத்தை ரோட்டில் வீசிய நபர் கைது செய்யப்பட்டார்.

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ‘Money Heist’ பாணியில், காரின் மீது ஏறி மக்களை நோக்கி ஒரு நபர் பணத்தை வாரி, வாரி வீசினார்.

மாளவியா நகரில் உள்ள கௌரவ் டவருக்கு வெளியே இருந்த கூட்டத்தினரை நோக்கி ₹10 மற்றும் ₹20 நோட்டுகளை அந்த நபர் வீசி எறிந்தார். இதைப் பார்த்த மக்கள் பணத்தை கீழே குனிந்து எடுத்தனர். இதனால், அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.