Sun. May 4th, 2025

மேகவெடிப்பால் தீஸ்தா நதி வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயம் – அதிர்ச்சி வீடியோ!

சிக்கிம் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பால், தீஸ்தா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரியில் திடீரென மேகம் வெடித்ததால் லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 23 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளனர்.

பள்ளத்தாக்கில் உள்ள சில இராணுவ நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சில வாகனங்கள் சேற்றில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 23 ராணுவ வீரர்களை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.