Sun. May 4th, 2025

6ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 64 வயது முதியவர் கைது!

6ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 64 வயது முதியவரை போலீசார் செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (64). இவர் கடந்த 6 மாதமாக அப்பகுதியை சேர்ந்த 6ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனையடுத்து, அச்சிறுமி 1098 என்ற சைல்ட் லைன் உதவி எண் மூலம் தொடர்புகொண்டு புகார் கொடுத்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சமூக நல அதிகாரிகள், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், போக்சோ சட்டத்தின் கீழ் பழனிவேலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.