கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை – அதிர்ச்சி சம்பவம்!

கரூர் அருகே திமுக பெண் கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு, சென்னசமுத்திரம் பேரூராட்சியில் 7வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் ரூபா. இவர் கரூரில் உள்ள ஒரு வீட்டில் 5 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பிவில்லை. இதனையடுத்து, மகன் பல இடங்களில் தேடியும் ரூபா கிடைக்கவில்லை. இதனையடுத்து,
மகன் கரூர் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த வழக்குப் பதிவு செய்த போலீசார் ரூபாவை தேட ஆரம்பித்தனர். இதனையடுத்து, பாலமலை அருகில் உள்ள காட்டில் கவுன்சிலர் ரூபாவின் உடலை போலீசார் சடலமாக மீட்டனர்.
மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், டீக்கடை வைத்துள்ள தம்பதி நகைக்காக கொலை செய்திருக்கலாம் என்று தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.