Sun. May 4th, 2025

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது புழல் சிறையில் அடைத்தனர். அவருக்கு விதிக்கப்பட்ட சிறைக்காவல் கடந்த செப்.15ம் தேதியோடு நிறைவடைந்தது.

அதே நாளில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன், வீடியோ கால் மூலமாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது விசாரணை நடத்திய நீதிபதி அல்லி, இன்னும் 14 நாட்களுக்கு அவருக்கு சிறைக்காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. ஆனால், செந்தில் பாலாஜி மனுவை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதற்கான காரணம் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.