போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ரவுடி – போலீசார் சுட்டுக் கொலை!
ஸ்ரீபெரும்புதூர், சோகண்டியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர், கிளாய் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வா. இவர் முன்னாள் பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் போன்ற செயல்களில் விஸ்வா ஈடுபட்டு வந்தார். இதுவரை இவர் மீது 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி தான் விஸ்வா சிறையிலிருந்து வெளியே வந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்ரீபெரும்புதூர் போலீசில் கையெழுத்திட்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று ஸ்ரீபெரும்புதூர், சோகண்டியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற விஸ்வாவை போலீசார் சுட்டுக் கொலை செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
