நடிகர் ரஜினிகாந்த் சசிகலா திடீர் சந்திப்பு..! |

நடிகர் ரஜினிகாந்தை போயஸ்கார்டன் இல்லத்தில் சசிகலா சந்தித்து நலம் விசாரித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சசிகலாவின் உடல் நலம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் கேட்டறிந்தார். சென்னை திரும்பிய சசிகலாவை ஏராளமான அரசியல் பிரமுகர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்த நிலையில் அண்ணாத்தே படப்பிடிப்பின் போது ரஜினிகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. படப்பிடிப்பு முடிந்த பின்னர் சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வீடு திரும்பினார் ரஜினிகாந்த்,
இந்நிலையில் 07-12-2021 அன்று இரவு திடீர் என்று நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்ற சசிகலா அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார் சசிகலா. இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உடனிருந்தார். ரஜினிகாந்த்தை, சசிகலா சந்தித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.