குப்பை கிடங்காக மாறிய நகராட்சி மருத்துவமனை | மீண்டும் செயல்பட தருமை ஆதீன நிர்வாகம் முயற்சி |
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் வடக்கு வீதியில் சியாமளா தேவி கோயில் அருகில் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான 2 ஏக்கர் இடத்தில் தருமை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாசாரிய சுவாமிகளால் இலவச மருத்துவமனை துவங்கப்பட்டது..

பின்பு அவரது வழித்தோன்றலாகிய சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகளால் 1951- ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பணிகள் நிறைவடைந்து அப்போதைய சென்னை மாகாண முதல்வர் குமாரசாமி ராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்டு நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட இந்த மருத்துவ விடுதி, இலவச மகப்பேறு மருத்துவமனையாக செயல்பட்டு வந்த நிலையில் மயிலாடுதுறை நகராட்சியின் பராமரிப்பின்மை காரணமாக அந்த மருத்துவமனை கட்டடம் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயலற்று பழுதடைந்த மகப்பேறு மருத்துவமனையை புனரமைக்காத சூழலில் அங்கே பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி குப்பைகளை தரம் பிரிக்க கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதிய நுண்ணுயிர் கிடங்கை நகராட்சி நிர்வாகம் கொண்டு வந்தது தற்போது அதுவும் இங்கு செயல்பாடின்றி குப்பைகள் குவிந்து அப்பகுதியே சுகாதார சீர்கேடாக காணப்படுகிறது.

இந்நிலையில் சியாமளா தேவி கோயிலில் நடைபெற்றுவரும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகள், இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த மருத்துவமனை கட்டடத்தை கடந்த 4 நாட்களுக்கு முன் பார்வையிட்டார்..

அப்போது அவர் தானமாக மடத்தின் சார்பில் நிலம் வழங்கி கட்டித் தரப்பட்ட கட்டடம் தற்போது பராமரிப்பின்றி கிடப்பதைக் கண்டு வருத்தமடைந்து குருமகா சந்நிதானம் கூறுகையில்.

நகராட்சி நிர்வாகம் பழுதடைந்துள்ள மகப்பேறு மருத்துவமனை கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு அதை தாமதிக்காமல் வழங்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டும், மேலும் அப்படி அதில் ஏதேனும் நிர்வாக சிக்கல்கள் இருக்கும் பட்சத்தில் அந்த நிலத்தை மீண்டும் ஆதீன நிர்வாகத்திடம் ஒப்படைத்தால், அங்கு மீண்டும் புதிய மருத்துவமனை கட்டி ஆதீன நிர்வாகம் பராமரிக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துக் கொண்டார்..
தமிழக அரசு ஆதீனத்தின் கோரிக்கையை ஏற்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
