Sun. May 4th, 2025

மகளிர் அணி தலைவி மோசடி லீலை? | ஊருக்கு உபதேசம் : தமிழருவி மணியன் | சிக்கும் புகைப்படக்காரர் ஜெகன் |

காந்திய மக்கள் இயக்கம் என்ற கட்சியை துவக்கி நடத்தி வருபவர் தான் தமிழருவி மணியன் இவரது கட்சியின் மகளிர் அணி தலைவியாக செயல்பட்டு வரும் வள்ளி ரமேஷ் என்பவர் பல நபர்களை ஏமாற்றி லட்ச கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது!

யார் இந்த வள்ளி ரமேஷ்?

2016ம் ஆண்டு குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட்ட பெண் வேட்பாளர் தான் இந்த வள்ளி. இவரது கணவர் பெயர் ரமேஷ் அதை சேர்த்து வள்ளி ரமேஷ் என அழைக்கப்படுபவர், கடந்த 2016ம் ஆண்டு தேர்தலின் போது இவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து குன்னூர் தொகுதியில் வாக்கு சேகரித்தவர் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரான தமிழருவி மணியன்..

காந்தி பெயர் கொண்ட இயக்கத்தின் நிழலில் இருக்கிறோம் என்ற மமதையில் பல நபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வந்தவர் தான் குன்னூர் வள்ளி ரமேஷ் என்பவர்.

இவரால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தான் ராமர். இவர் பாத்திரக்கடை நடத்தி வருபவர். தனது புதிய இல்லம் கட்டுவதற்கு இவர் வங்கியில் லோன் பெற்றார். அந்த பணத்தை மோசடி செய்து அபகரித்து பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றியுள்ளார் மகளிர் அணி தலைவி வள்ளி?

முதன் முதலில் பாத்திரக்கடை நடத்தி வரும் ராமர் என்பவருக்கு மொத்த வியாபாரம் செய்யும் சதீஷ் என்பவர் தனது கடைக்கு மொத்தமாக சரக்குகளை விநியோகம் செய்பவராவர். இவர் மூலம் தான் புவனா என்ற பெண் ராமரை தொடர்புக் கொண்டு தனக்கு லோன் பெற்று தருவதாக கூறியுள்ளார். புவனா வங்கி மூலம் ராமருக்கு வங்கியில் கடன் பெற விண்ணப்பித்து இருந்த நிலையில் திடீர் என ராமர் அதை விருப்பமில்லாமல் விண்ணப்பித்ததை ரத்து செய்யுமாறு கூறினார். மேலும் தானே டிசிபி வங்கியில் விண்ணப்பித்து இருந்த ரூ.30 லட்சம் லோன் ராமருக்கு கிடைக்க பெற்றது.

இதை அறிந்து கொண்ட புவனா மீண்டும் ராமரை தொடர்புக் கொண்டு எங்களிடம் ஒரு லாபம் தரக்கூடிய முதலீடு தொழில் உள்ளது. அதில் நீங்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் கூடுதலாக ரூ.2 லட்சத்துடன் சேர்த்து ரூ.12 லட்சம் பணம் கொடுத்து நான்கே நாட்களில் மீண்டும் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்த ராமரை தினகரன் நாளிதழில் புகைப்பட நிருபராக பணிபுரியும் தனது உறவினரான ஜெகன் என்பவரை ராமரை தொடர்புக் கொள்ள வைத்து முதலீடு செய்ய ரூ.10 லட்சம் தர சம்மதிப்பதற்கு நம்பிக்கை வார்த்தைகள் கூறி பேச வைத்துள்ளார்.

தாங்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு என்ற ஆசிரமம் ஒன்றை நடத்தி வருவதாகவும் ராமர் என்பவருக்கு திருமணமாகி நீண்ட காலமாக குழந்தை இல்லை என்பதை அறிந்து கொண்டு நீங்கள் இந்த ஆசிரமத்தில் யாதேனும் ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம்.

இங்குள்ள 4 குழந்தைகளுக்கு சிகிச்சைக்காக இப்பணம் தேவைபடுவதாக கூறி. இதில் நீங்கள் புண்ணியம் அடையலாம் என்றும் நீங்கள் தரும் பணத்திற்கு கூடுதலாக 2 லட்சம் பெறலாம் என கூறியுள்ளார் தினகரன் நாளிதழின் புகைப்படக்காரர் ஜெகன்.

வள்ளி ரமேஷ் என்பவர் காந்திய மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி தலைவி என்பதால் நீங்கள் நம்பிக்கையுடன் இப்பணத்தை தந்து உதவலாம் என கூறியுள்ளார் தினகரன் நாளிதழின் புகைப்படக்காரர் ஜெகன்…

மேலும், தங்களின் தொழில் தலைமையிடத்து நபர் உங்களிடம் விரிவாக பேசுவார் என தினகரன் நாளிதழின் புகைப்படக்காரர் ஜெகன் ராமரிடம் கூறியுள்ளார். பின்பு வள்ளி என்பவரை அறிமுகம் செய்து தொலைபேசியில் தொடர்பில் அழைத்து மீண்டும் ராமரிடம் ஜெகன் மற்றும் வள்ளி ஆகிய இருவரும் வற்புறுத்தியுள்ளனர்…

தமிழ் அருவி தொடர்ந்து கொட்டும்…