பள்ளிகரணை இளம் பெண் தற்கொலையில் | வீடியோ காலில் சிக்கிய இராணுவ வீரர் கைது |
காதலிக்க வற்புறுத்திய இராணுவ வீரர் தொல்லை தாங்காமல் இளம் பெண் வீடியோ காலில் தூக்கிட்டு தற்கொலை
சென்னை பள்ளிகரணை அடுத்த பெரும்பாக்கம், எழில் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மகள் பாரதி (24) இவர் கடந்த 2ம் தேதி தனது வீட்டின் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.


அவரது செல்போனை பள்ளிகரணை போலீசார் கைப்பற்றி விசாரித்த போது அதில் கிடைத்த வீடியோ ஒன்று போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் எதிர்முனையில் ஆண் ஒருவர் இவருக்கு வீடியோ கால் செய்து பேசியுள்ளார்.இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதும் பதிவாகியுள்ளது.


பின்னர் எதிர்முனையில் பேசியவரிடம் போலீசார் பாரதியின் செல்போனில் இருந்து குறுந்தகவல் அனுப்பி பேச்சுக் கொடுத்து அந்த நபரை விருது நகர் சென்று கைது செய்தனர். விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்த முத்து குமரேசன் (32) என்பதும், இராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிந்து வருவதும், ஏற்கனவே திருமணம் ஆனதும், ஹலோ ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டு பேசியதாகவும் அதனை சாதகமாக பயன்படுத்தி நேரில் வரவழைத்து பேசி பழகி புகைப்படம் எடுத்துக் கொண்டு தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தியதாலும் இல்லையெனில் குடும்பத்தினரை கொன்று விடுவதாகவும் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பாரதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்த பள்ளிகரணை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் அவரை சிறையில் அடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.
மாவீரன்
