Fri. May 2nd, 2025

லஞ்சத்தில் திளைக்கும் சார்பதிவாளர் அலுவலகம் | ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை தொடர் சோதனை |

சென்னை நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் கணக்கில் வராத 2,12,000 ரூபாய் பறிமுதல்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி கலைச் செழியன், சென்னை டி.எஸ்.பி வெற்றிச் செல்வம், ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத சுமார் 2,12,000 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

கடந்த மாதம் 16ம் தேதியில் இங்கு சோதனையின் போது கணக்கில் வராத 2,32,935 ரூபாய் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது…

செய்தி மாவீரன்