Sun. May 4th, 2025

ஆளும் கட்சி என மிரட்டிய நபரை…?| தூக்கி உள்ளே போட்ட காவல் அதிகாரி |

வேளச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தம்பி பார் என கூறிக் கொண்டு 24 மணி நேரமும் சட்ட விரோத மது விற்பனை தொடர் புகாரின் காரணமாக அதிரடி காட்டிய அடையார் துணை ஆணையர்.

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் ஐ-பை என்ற பெயரில் டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இந்த பார் அ.தி.மு.க., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோக்கின் தம்பி ரவி என்பவருக்கு சொந்தமானது என சொல்லப்படுகிறது. இதனை சொல்லியே காவல் துறையை சரிகட்டி 24 மணி நேரமும் சட்டவிரோத மது விற்பனை மற்றும் அதிக விலைக்கு பாரில் பொருட்களை விற்பனை செய்து வந்தனர்.

அ.தி.மு.க.,வில் மாவட்ட செயலாளர் பொறுப்பில் அசோக் உள்ளதால் நடவடிக்கை எடுக்க வேளச்சேரி போலீசாரும் தயங்கி வந்தனர். இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு பொத மக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர் புகார் அளித்து வந்தனர்.

இதன் பிறகு அடையார் துணை ஆணையர் விக்ரமன் தலைமையிலான தனிப்படை போலீசார் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட வேளச்சேரியை சேர்ந்த முத்து (28) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து சுமார் 180  மி.லி., அளவு கொண்ட 154  மதுபான பாட்டில்கள் மற்றும்  22  பீர் பாட்டில்கள் என 176 மதுபான பாட்டில்கள் பறிமுதல்  செய்யப்பட்டது.

முத்துவை கைது செய்து விசாரணை நடத்தினர். முத்துவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

ஆளும் கட்சி மாவட்ட செயலாளரின் உறவினருக்கு சொந்தமான பார் என்றாலும் சட்ட விரோத மது விற்பனை செய்த நபரை கைது செய்த அடையார் துணை ஆணையரின் செயல் பாராட்டுகுரியது. பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்…