Thu. May 8th, 2025

காதலை ஏற்காத 8ம் வகுப்பு மாணவியின் | கழுத்தை அறுத்த வாலிபர் தலைமறைவு |

காதலிக்க மறுத்ததால் எட்டாம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி.

சென்னை அமைந்தகரை முத்து மாரியம்மன் காலனியை சேர்ந்த ஜெயராம் இவரது மகள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வரும் நித்யா (26) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மொட்டை மாடியில் நின்று கொண்டு இருந்த அந்த மாணவியிடம் நித்யா தனது காதலை கூறியுள்ளார். அப்போது அந்த பெண் காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த நித்யா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார். அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள். உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய நித்யாவை அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்…

பேராண்மை செய்தி குழு