லாட்ஜில் போதை வஸ்து காய்ச்சிய நபர் |தீயில் கருகி பலி |

லாட்ஜில் போதை வஸ்து காய்ச்சிய | கொலை குற்றவாளி தீயில் கருகி பலி சென்னை நொளம்பூரை அடுத்த அயனம்பாக்கம், மாந்தோப்பு சாலையில் ஓயோ ஆன்லைன் விடுதியில் ரெய்ஸ் ராஜா, மாசி (எ) ராஜேஷ், ராஜி (எ) ஞானவேல்ராஜா, விக்னேஷ், முகமது ரசாக் ஆகிய ஐந்து பேரும் அறையை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். மூன்று பேர் மதுபானம் வாங்க வெளியே சென்ற நேரத்தில். ரெய்ஸ் ராஜா, விக்னேஷ் இருவரும் சாராயம், கஞ்சா, மீத்தேன் என்ற அமிலத்தை சேர்த்து கொதிக்க வைத்து அதில் இருந்து ஜெல் தயாரித்து கொண்டு இருக்கும் போது அதில் இருந்து வெளி வந்த புகை அறை முழுவதுமாக பரவி இருந்த நிலையில் ரெய்ஸ் ராஜா லைட்டர் மூலம் சிகரெட் பற்ற வைத்துள்ளார். அப்போது திடிரென தீ பிடித்து விக்னேஷ் மற்றும் ரெய்ஸ் ராஜா ஆகிய இருவருக்கும் தீ காயம் எற்பட்ட உடண் விக்னேஷ் தீ காயங்களுடன் வெளியே ஒடி விட்டதாகவும், ரெய்ஸ் ராஜாவை OYO Roomsல் வேலை செய்யும் ரூம் பாய்ஸ் அனைவரும் சேர்ந்து ரூம்மில் இருந்து தூக்கி வந்து வெளியே ரோட்டில் போட்டுள்ளனர்..

உடனே முகமது ரசாக் ராஜாவை நொளம்பூர் சர்விஸ் ரோட்டில் உள்ள பாலாஜி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். விபத்து குறித்த தகவல் நொளம்பூர் காவல் நிலையத்திற்கு மருத்துவமனை மூலம் தெரியப்படுத்த மேலும் காயம் அடைந்த இருவரும் தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஜெல்லை சிகரெட்டில் தடவி இழுத்தால் அதிக போதை வரும் என்பது விசாரணையில் தெரியவர இந்த சம்பவம் தொடர்பாக நொளம்பூர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ரெய்ஸ் ராஜா உயிர் இழந்தார். உயிர் இழந்த ராஜா மீது துரைபாக்கம் காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது…
நிருபர் வே.சரவணன்