திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | இன்று கந்தசஷ்டி விழா தொடக்கம் |
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் | கந்தசஷ்டி விழா நிகழ்ச்சி தொடக்கம் |
திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் முருகப் பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும் இங்கு முருகப் பெருமான் வள்ளி தெய்வயானை தாயாருடன் காட்சியளிக்கிறார். அருள்மிகு சண்முகப் பெருமானுக்கு 28-10-2019 முதல் 2-11-2019 வரை லட்சார்ச்சனையும் 2-11-2019 சனிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் 3-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணிக்கு கல்யாண உற்சவருக்கு திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. தினமும் உச்சிக்கால நேரத்தில் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் முதல் நாள் இன்று மூலவருக்கு புஷ்ப அலங்காரம் இரண்டாம் நாள் மூலவருக்கு பட்டு அலங்காரம் மூன்றாம் நாள் மூலவருக்கு தங்க கவச அலங்காரம் நான்காம் நாள் மூலவருக்கு திருவாபரண அலங்காரம் ஐந்தாம் நாள் மூலவருக்கு வெள்ளி கவச அலங்காரம் ஆறாம் நாள் மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் ஏழாம் நாள் நிகழ்ச்சியின் இறுதி நாளன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது…

நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் மலைக்கோயில் சுற்றியுள்ள மண்டபங்களில் சமய சொற்பொழிவுகள் பக்தி இன்னிசையும் மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறும் இன்று மூலவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு பால்பழம் பஞ்சாமிர்தம் சந்தனம் தேன் ஆகிய பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டதும் நைவேத்தியங்கள் படைக்கப்பட்டது நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர் காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகநாதர் வள்ளி தேவயானை தாயாருடன் எழுந்தருளி பக்தர்கள் முன்னிலையில் புஷ்பாஞ்சலி லட்சார்ச்சனை தொடங்கியது திருக்கோயில் தலைமை குருக்கள் சுதாகர் தலைமையில் கோபி ஆகியவர்கள் சாமிக்கு புஷ்பங்களை கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்து லட்சார்ச்சனை திருவிழா தொடங்கியது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் பழனிகுமார் மற்றும் திருக்கோயிலில் தக்கார் ஜெய்சங்கர் ஆகியவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்…
பேராண்மை செய்தி குழு
