100 கிலோ குட்காவுடன் மூவரை கைது செய்த போலீசார்.

அக்டோபர் 18-2019
சென்னை புளியந்தோப்பு மற்றும் திருவிக நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா விற்பதாக புளியந்தோப்பு போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி அப்பகுதியில் சோதனை செய்ததில் அப்துல் ரஹீம் (35) என்பவரது பெட்டிக் கடையில் அரை கிலோ குட்கா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பெரம்பூர் வீனஸ் பகுதியில் உள்ள தீட்டி தோட்டம் ஒன்றாவது தெருவைச் சேர்ந்த உமர் சமீல் (52) என்பவரிடம் இருந்து குட்காவை வாங்கி விற்பதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உமர் சமீல் வீட்டில் சோதனை செய்த புளியந்தோப்பு போலீசார் அவரது வீட்டில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய புளியந்தோப்பு பகுதி பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்த புருஷோத்தமன் (29) என்பவரையும் கைது செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்…
நிருபர் வே.சரவணன்