Sat. Mar 7th, 2026

ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை | தனியார் நிதி நிறுவன நெருக்கடி காரணமா? |

அக்டோபர் 13-2019

சென்னை ஆவடி அடுத்த அன்னனூர், சிவசக்தி நகரை சேர்ந்த கோவிந்தசாமி(68),
கூலி தொழிலாளி இவரது மனைவி சுப்பம்மாள் (60) இவருக்கு நகராஜ் (35), ரவி(30) ஆகிய மகன்கள் கல்யாணி(28) உட்பட 3 மகள்களும் உள்ளனர். மகள், மகன்கள் அனைவருக்கும் திருமணமாகி உள்ளனர்..

இந்த நிலையில் கோவிந்தசாமி வீட்டில் அவரது மனைவி, மகன்களுடன் குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். அவருடன் மகள் கல்யாணி கல்யாணி மகள்கள் சர்வேஷ்வரி(6),
யோகேஷ்வரி(8) ஆகியோரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர். இதில் கோவிந்தசாமி, சுப்பமாள், நாகராஜ், ரவி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். கல்யாணி மற்றும் அவரது மகள்கள் 2 பேரும் கே.எம்.சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்…

உயிருக்கு போராடி கொண்டிருக்கும் கல்யாணி தனது சகோதரர்களுக்கு பல லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளார் என்றும் பணத்தை கேட்டு கல்யாணி தொல்லை கொடுத்துள்ளதாகவும் அதனால் வேதனை அடைந்து கோவிந்தசாமி உள்ளிட்ட எல்லோரும் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சு மருந்தை சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டதாகவும் உங்களோடு நானும் குழந்தைகளோடு மருந்து குடித்து செத்துபோகிறேன் என்று கல்யாணியும் விஷம் அருந்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்வவம் தொடர்பாக திருமுல்லைவாயில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவிந்தசாமி குடும்பத்திற்கு சுமார் 80 லட்சம் வரை கடன் இருப்பதாகவும், அதில் 60 லட்சம் வரை தனியார் நிதி நிறுவனமான ஸ்ரீராம் சிட் ஃபண்டில் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோல் மகள் கல்யாணியும் நகை பணம் என 8 லட்சம் வரை கொடுத்துள்ளார்.
கோவிந்தசாமி குடும்பத்தில் அனைவரும் கூலி தொழில் செய்து வந்ததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்தனர். இதனால் தற்கொலை முடிவுக்கு வந்த கோவிந்தசாமி தனது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உடன் பூச்சி கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகவும் அப்போது வீட்டில் இருந்த கல்யாணி தாய் தந்தை இறந்தவுடன் கடனை எப்படி சமாளிப்பது என தெரியாமல் அவரது மகள்களுடன் தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது கல்யாணியின் கணவன் அவரது வீட்டிற்கு வந்ததால் உயிருக்கு போராடி கொண்டிருந்த மனைவி மற்றும் மகள்களை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்ட சென்று பிழைக்க வைக்க முடிந்தது. இதனிடையே கோவிந்தசாமி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது நிதி நிறுவனத்தின் நெருக்கடியாக இருக்கலாம் என காவல் துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்…

நிருபர் வே.சரவணன்