கல்வி கடன் தொகை பெற்ற மாணவ, மாணவிகளை மிரட்டும் கனரா வங்கி.!
அக்டோபர் 13-2019
வசதியற்ற, நடுத்தர பிள்ளைகள் உயர் கல்வி படிப்பிற்காக அரசு உடமையான வங்களில் கல்வி உதவி கடன் பெற்று சிலர் படித்து வருகின்றனர். பலர் படிப்பை முடித்து வேலை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வேலை கிடைக்கும் என்று கனவுடன் படிப்பை முடித்த மாணவ, மாணவிகள் பலர் வேலையின்மை காரணத்தால் மன உலச்சலில் இருக்கும் தருவாயில் உள்ளனர்.
இந்நிலையில் கனரா வங்கி ஒரு சில கிளைகளில் கடன் தொகையில் நிலுவையில் உள்ளவர்களுக்கு போன் செய்து அவர்களை மிரட்டும் தோனியில் பேசி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் அந்த மாணவ, மாணவிகளுக்கு ஜாமீன் போட்டவர்களுக்கும் போன் செய்து தொல்லை கொடுத்து கல்வி கடனை உன்னடியாக செலுத்தாவிட்டால் உங்களின் சம்பள பணத்தை பிடிக்க ஏற்பாடு செய்வோம் என்றும் அல்லது வக்கீல் நோட்டீஸ் அனுப்புவோம் என மிரட்டி வருகின்றனர். பணக்காரனுக்கும், தொழில் அதிபருக்கும், சினிமா தயாரிப்பாளர்களுக்கும் கோடி கணக்கில் கடன் தொகை கொடுத்து அதை வசூல் செய்யாமல் இருக்கும் இந்த கனரா வங்கி அப்பாவி மாணவர்களை மிரட்டி வருவதை நிறுத்த வங்கி தலைமை அலுவலக பெண் அதிகாரி உத்தரவிட வேண்டும். கடன் தொகை பெற்று கட்டாமல் இருப்பவர்களை மீது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக ஒரு சில மாதங்களாக கட்டாமல் நிலுவையில் உள்ள தொகையை மிரட்டல் மூலம் கட்ட வைப்பது ஜனநாயகத்தின் விரோதமான செயல். சென்னை கனரா வங்கி வேப்பேரி கிளை உள்ளிட்ட ஒரு சில வங்கிகள் இது போன்று நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பேராண்மை செய்தி குழு
