பாலத்தின் கீழ் நின்று வழிப்பறி செய்த ஒருவர் கைது | இருவர் தலைமறைவு |
அக்டோபர் 02 2019
சென்னை, வில்லிவாக்கம் ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்த யோகேஷ்வர் (18), என்பவர் அரும்பாக்கம் வைஷ்னவா கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இரவு வில்லிவாக்கம் தெற்கு மாடவீதியில் உள்ள நண்பர் தீபக் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் பொழுது வில்லிவாக்கம் சுரங்கபாதை அருகே நடந்து சென்ற பொழுது… மதுபோதையில் இருந்த மூன்று பேர் அவரை மடக்கி 20 ஆயிரம் மதிப்புள்ள அவரது செல்போனை பறித்து சென்றுள்ளனர்.


அப்பொழுது ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர். அதில் இருவர் தப்பி விட, ஒருவரை மட்டும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் வில்லிவாக்கம் நாராயண மேஸ்திரி தெருவை சேர்ந்த ஜோகித் (19), என்பதும் அதே பகுதியை சேர்ந்த முகேஷ் மற்றும் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேகர் என்பதும் தெரியவர ஜோகித்தை மட்டும் கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தப்பியோடிய சேகர் மற்றும் முகேஷை தேடி போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கின்றனர்.
நிருபர் வே.சரவணன்
