சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகே வழிப்பறி


சென்னை வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் அமைந்துள்ள ஆற்காடு லூர்தன் சர்ச் மகளிர் விடுதியில் தங்கி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார் செல்வ மெரின். நேற்று காலையில் இவர் தனது பணிக்கு செல்வதற்காக விடுதியில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஒட்டிய நிலையில் செல்வ மெரின் எதிர்பாராத நேரத்தில் அவரது கழுத்திலிருந்த ஒரு சவரன் தங்க செயினை அறுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தனது வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செல்வ மெரின் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையில் செல்வ மெரியிடம் செயின் பறித்து செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது…
நமது நிருபர்