70.25 லட்சம் மதிப்புள்ள 1.86 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.
ஆகஸ்ட் 07-2019
சென்னை விமான நிலையத்தில் வெளி நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் கடத்தல் பொருட்கள் வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள், நேற்று 06 ஆம் தேதி காலை வழக்கம் போல் வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளின் பொருட்களை சோதனை ஈடுபட்டு இருந்த போது, உத்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முஸ்மில் ஹூசேன் (40) என்பவர் ரியாத் இல் இருந்து மஸ்கட் வழியே சென்னை வந்தடைந்தார். முஸ்மில் ஹூசேனிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணையில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் ஹூசேன் எடுத்து வந்த சூட்கேஸை சோதனை செய்ததில் அதில் Rechargeable Hand Light அதிக எடைகொண்டு இருந்ததால் அதை பிரித்து பார்த்ததில் சுமார் 16 தங்க கட்டிகள் இருந்ததை உறுதி செய்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். முழுமையான விசாரணைக்கு பின் ஹூசேன் ரியாத்தில் கார் டிரைவராக பணிபுரிந்து வந்ததாகவும் முதன் முறையாக தான் சென்னை வந்துள்ளதாகவும் கூறினார், மேலும் அவரது நண்பர் தான் விமான டிக்கெட் தனக்கு எடுத்து தந்து சென்னையில் அவரது நண்பரின் வீட்டில் இந்த சூட்கேஸை ஒப்படைக்க சொன்னதாகவும் அந்த சூட்கேஸில் என்ன இருக்கிறது என்பது தனக்கு தெரியாது எனறும் ஹூசேன் கூறியதாக சுங்கத் துறை அதிகாரிகள் ஹூசேனை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் மேற்கொண்ட முழுமையாக விசாரணை நடத்திய பின்னர் தான் முழு விவரம் தெரிய வரும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்…
-நிருபர் ராம்
