அரசு பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் 23 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி கொள்ளை.
ஆகஸ்ட் 07-2019
திருத்தணி அருகே அன்னபூரணி நகர் பகுதியில் வசிப்பவர் ஆசிரியர் மணிகண்டன் (40). இவர் மனைவியும் அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர். இவர்கள் இருவருமே திருத்தணியில் பள்ளி ஆசிரியர்களாக பணி புரிந்து வருகிறார்கள். இவர்கள் நேற்று காலை தங்களது வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்று விட்டனர். மாலை பள்ளி முடிந்து 6-மணியளவில் வீட்டில் வந்து பார்க்கும் பொழுது முன் கேட் பூட்டப்பட்டு இருந்தது, வீட்டின் முன் வாசல் கதவு கடப்பாரையால் உடைக்கப்பட்டு வீட்டிற்குள் சென்ற மர்ம நபர்கள் வீட்டில் பீரோவில் இருந்த 23 சவரன் நகை ஒரு கிலோ வெள்ளி 30 ஆயிரம் ரூபாய் பணம் என தகவல் 5க்கும் மேற்பட்ட பட்டுப் புடவைகளையும், பல்வேறு பொருட்களை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். ஆசிரியர் மணிகண்டன் உடனடியாக திருத்தணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் ஆசிரியர் வீட்டில் கொள்ளை அடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

திருத்தணி பகுதியில் தொடர் கொள்ளை சம்பவங்களும், இருசக்கர வாகனங்கள் திருட்டும் நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம் போலீசார் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபடுவதில்லை என்ற குற்றச் சாட்டாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். காவல்துறையின் சார்பில் கூறப்படுவது… காவலர் பற்றாக் குறையை இதற்கு காரணம் என்று கூறுகின்றனர்.
-நமது நிருபர்
