இலவச வேட்டி, சேலை வழங்கியதில் முறைகேடு | தாசில்தார் பணியிடை நீக்கம் |
ஆகஸ்ட் 05-2019
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் சீனிவாசனை பணியிடை நீக்கம் செய்ய விழுப்புரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சீனிவாசன் என்பவர் திருக்கோவிலூரில் வட்டாட்சியராக இருந்த போது இலவச, வேட்டி சேலை வழங்கியதில் முறைகேடு செய்ததாக புகார் வந்ததை அடுத்து, அவர் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
-நமது நிருபர்
