Sat. Mar 7th, 2026

போதையில் பீர் பாட்டிலால் வாலிபரை கொலை செய்த 6 பேர் தலைமறைவு.

ஆகஸ்ட் 04-2019

சென்னை, நெற்குன்றம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் (22). இவரும் இவருடைய மாடாவிக்கி, பேட்டை சுரேஷ் , பலாக்கொட்டை கார்த்தி, மண்ட தினேஷ், அரிஹரசுதன், இஸ்ரேல் நண்பர்களும் சேர்ந்து நேற்று இரவு மது அருந்தி உள்ளனர். அதன் பின்பு குடிபோதையில் இருந்த ரஞ்சித்தை கல்லால் அடித்து பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

கொலை செய்யப்பட்ட ரஞ்சித்

இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதும்… சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து ரஞ்சித்தை கொலை செய்த மாடா விக்கி, பேட்டை சுரேஷ், பலாக்கொட்டை கார்த்தி, மண்ட தினேஷ், அரிஹரசுதன், இஸ்ரேல் ஆகியோரை கோயம்பேடு போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட ரஞ்சித் கடந்த ஆண்டு 2018 காவலர் அன்பழகன் என்பவரை ஓட ஓட விரட்டி வெட்டியவர். இவர் மீது பூந்தமல்லி காவல் நிலையத்தில் கொலை முயற்சி, மற்றும் அடிதடி, போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடதக்கது. மேலும் இது போல் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டில் பெண் கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர் யார் என்று அடையாளம் தெரிந்தும்… இதுவரை இந்த வழக்கு சம்பந்தமாக குற்றவாளியை இதுவரை கைது செய்யவில்லை என தகவல்.

-நமது நிருபர்