Sat. Mar 7th, 2026

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த வாலிபர் கைது.

ஆகஸ்ட் 02-2019

ஒரு கத்தி, செல்போன், இருசக்கர வாகனம் பறிமுதல். சென்னை அமைந்தகரை பி.பி.தோட்டம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து அமைந்தகரை கிரண்ட் சாலை வழியாக விட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது…
அமைந்தகரையை சேர்ந்த முகமது அஜிம்(20) என்பவர் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து, மணிகண்டனை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினார். அதற்கு மணிகண்டன் பணம் என்னிடம் இல்லை என்று கூறவே, திடீர் என்று முகமதுஅஜிம் செல்போனை பறித்து கொண்டு பைக்கில் வேகமாக சென்று விட்டார்.

பயந்து போன மணிகண்டன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனே சம்பவ இடத்துக்கு வந்த அமைந்தகரை போலீசார் அடையாளத்தை கேட்டு.. மணிகண்டனை ஏற்றிக் கொண்டு ரோந்து வாகனத்தில் சுற்றும் போது அமைந்தகரையில் சாலை யோரமாக நின்று கொண்டு இருந்த முகமது அஜிம்மை கைது செய்தனர். காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் முகமது அஜிம் மீது செல்போன் பறிப்பு, அடிதடி,செயின் பறிப்பு போன்ற பல வழக்குகள் அமைந்தகரை, தேனாம்பேட்டை, நசரத்பேட்டை, பாண்டிபஜார், ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு கத்தி, செல்போன், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்…

-நமது நிருபர்