மூன்று நாட்களாக அழுகிய நிலையில் வாலிபர் பிணம் | போலீசார் விசாரணை |
ஜூலை 30-2019
சென்னை, அமைந்தகரை வட அகரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (40) இவர் அதே பகுதியில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வேலையை முடித்து விட்டு இரவு தன்னுடைய வீட்டிற்குள் மது அருந்தி விட்டு இறந்துள்ளதாக தெரிகிறது. நேற்று மாலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே அருகே உள்ளவர்கள் அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கொடுக்க.. சம்பவ இடத்துக்கு வந்த அமைந்தகரை போலீசார் வீட்டில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சக்திவேலை மீட்டு… உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்த அமைந்தகரை போலீசார் சக்திவேல் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இவருடைய நண்பர்கள் வீட்டிற்குள் வந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-நமது நிருபர்
