மோப்ப நாய் உதவியுடன் நகையை மீட்ட போலீசார் | பெண் ஒருவர் கைது |
ஜூலை 30-2019
16 சவரன் நகை கொள்ளை போன சம்பவத்தில் பெண் கைது.
சென்னை, நெற்குன்றம் சரஸ்வதி காலனி பகுதியை சேர்ந்தவர் சங்கர்(47). கடந்த 26ஆம் தேதி குடும்பத்தினர் அனைவரும் குற்றாலம் சென்று விட்டு திரும்பிய பொழுது… தங்களது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு படுக்கை அறையில் இருந்த 16.1/2 சவரன் தங்க நகையை கொள்ளை அடித்துள்ளது தெரியவர… இந்த சம்பவம் தொடர்பாக சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில் கோயம்பேடு போலீசார் மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டதாக பக்கத்து வீட்டில் வசித்து வந்த கவியரசி (24), என்ற பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவரிடமிருந்து 16 சவரன் தங்க நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கவியரசி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-நமது நிருபர்
