Sat. Mar 7th, 2026

15 லட்ச ரூபாய் கடன் பெற்றவரை கடத்தி | மூன்று நாட்களாக அடைத்து வைத்ததாக புகார் |

ஜூலை 30-2019

திருமங்கலத்தில் 15 லட்சம் கடன் தகராறில் காரில் கடத்தியதாக புகார். பரமக்குடியை சேர்ந்தவர் அந்தோணி சாமி (50). இவர் திருமங்கலம், பாடி குப்பத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர்… திருமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் பரமக்குடியைச் சேர்ந்த சகாயம் என்பவரிடம் தான் ரூ.15 லட்சம் வாங்கியதாகவும், திடீரென்று அந்த பணத்தை முழுவதுமாகக் கேட்டு சகாயம் தொல்லை கொடுத்து வந்ததாகவும், பணம் கொடுக்க காலதாமதம் ஏற்பட்டதால் சில தினங்களுக்கு முன்பு அந்தோணிசாமி இருக்கும் இடத்திற்கு வந்த சகாயம் அவரிடம் பேசுவது போல் நடித்து, காரில் கடத்திச் சென்று… சென்னை மேடவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் மூன்று நாட்களாக வைத்து அடித்துத் துன்புறுத்தியதாகவும், இதனால் பயந்து போன அந்தோணிசாமி தனக்கு சொந்தமாக நிலம் இருப்பதாகவும், அதனை விற்றுத் தருவதாக கூறியதையடுத்து… பரமக்குடி அழைத்துச் சென்று அங்கு ஒரு தனி அறையில் வைத்து மீண்டும் அடித்து உதைத்ததாகவும், தன்னை கடத்தியவர்கள் அசந்த நேரம் பார்த்து தான் அங்கிருந்து தப்பி சென்னை வந்து விட்டதாகவும், தன்னை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.

அதைத்தொடர்ந்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியதில்… இன்று அந்தோணிசாமி என்பவர் திருமங்கலம் காவல் நிலையம் வந்தபோது தன்னை கடத்தியதாக கூறப்பட்ட சகாயமும் அங்கு இருந்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட எனது புகாரை ஆய்வாளர் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் என்னை கடத்தியவர் இவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி அந்தோணிசாமி கூறிவருகிறார்.

மேலும் சகாயம் மீது பரமக்குடி டவுன் காவல் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது சம்பந்தமாக திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-நமது நிருபர்