Sat. Mar 7th, 2026

நண்பரை இரும்புக் கம்பியில் தாக்கி கொலை | குற்றவாளி தலைமறைவு |

ஜூலை 29-2019

ராயப்பேட்டை தெய்வசிகாமணி தெருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் கட்டுமான பணிகளை செய்து வரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சின்னப்பராஜ் (19), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முல்லை நாதன் (22) ஆகிய இருவரும் ஒன்றாக தங்கி வேலை செய்து வந்தனர். நண்பர்கள் இருவருக்கும் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் குடிபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த முல்லைநாதன், சின்னப்பராஜை அடித்துக்கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

அதைத்தொடர்ந்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முல்லைநாதனை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சின்னப்பராஜ் 12வது வகுப்பு வரை படித்துவிட்டு கடந்த இரண்டு மாத காலமாக சென்னையில் வேலை பார்த்து வந்ததாகவும், தற்போது தேடப்படும் குற்றவாளி முல்லைநாதனும் கொலை செய்யப்பட்ட சின்னப்பராஜ் என்பவரும் நண்பர்களாக ஒரே இடத்தில் வேலை பார்த்ததாகவும், நேற்று இரவு குடி போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு அருகில் உள்ள இரும்புக் கம்பியால் சின்னப்பராஜை முல்லை நாதன் பலமாக தாக்கியள்ளார். அதில் படுகாயம் அடைந்த சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்து உள்ளார். பின்பு அங்கு இருந்து தப்பியோடிய முல்லை நாதனை ராயப்பேட்டை காவல் உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆய்வாளர் பாஸ்கர் தலைமயில் மூன்று தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். குற்றவாளி பிடிபட்டால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் எனவும்… கொல்லப்பட்ட சின்னப்பராஜின் மாமா தாமஸ் ராஜ் மற்றும் அக்கா பாஞ்சாலம் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளனர்.

-நமது நிருபர்