Sat. Mar 7th, 2026

10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் | 6 மாதமாக வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது |

ஜூலை 28-2019

சிவகங்கை மாவட்டத்தில் 6 மாதங்களாக ஆட்டம் காண்பித்த சங்கிலி திருடர்கள்… கடந்த 6 மாதத்தில் தொடர்ச்சியாக சிவகங்கையில் பல்வேறு இடங்களில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக ஆய்வாளர் மோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

6 மாதங்களாக நடைபெற்ற வழிப்பறியின் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில்… அதில் இரண்டு குற்றவாளிகளுக்கு தொடர்பு இருப்பதை அறிந்து அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் இருவரும் தங்களின் இரு கூட்டாளிகளுடன் கூட்டு வைத்து வழிப்பறி செய்து வந்ததை ஒப்புகொண்டனர்.

ஆதியாகுடி திருவாடானை ராமநாதபுரத்தை சேர்ந்த ஐயப்பன் (40), எம்ஜிஆர் நகர் கோட்டூர் பொள்ளாச்சியை சேர்ந்த சூர்யா (எ) சூர்யா ஜெகதீஸ் (25), இந்திரா நகர் சிவகங்கையை சேர்ந்த பால சந்திரன் (35) மற்றும் சிவகங்கை வீராம்மா காளியம்மன் தெருவை சேர்ந்த நூர் முகமது (20) என்ற நான்கு குற்றவாளிகளையும் 6 மாத தேடுதலுக்கு பின் கைது செய்து… அவர்களிடம் இருந்து 360 கிராம் எடையுள்ள சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார் குற்றவாளிகளை நீதிமன்ற ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

-நிருபர் ராம்