Sat. Mar 7th, 2026

1.5 லட்சம் மதிப்புள்ள பைக்கை திருடிய நபர்கள் | CCTV காட்சிகளை வைத்து விசாரணை |

ஜூலை 27-2019

அண்ணாநகர் பகுதியில் இருசக்கர வாகனம் (புல்லட்) குறிவைத்துத் திருடி செல்லும் திருடர்கள். சிசிடிவி காட்சிகளை வைத்து திருமங்கலம் போலீசார் விசாரணை.

திருடிக்கொண்டு செல்லும் பொழுது

அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ஜோசப் அபிசேக் ராஜன் (24). தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 1.5 லட்சம் மதிப்புள்ள தனது Royal Enfield இருசக்கர வாகனத்தை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் யாரோ திருடி சென்று விட்டதாக திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

திருடிய வீடியோ ஆதாரம்

அதில் இரண்டு நபர்கள் அந்த வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த புல்லட் வண்டியை சைடு லாக்கர் உடைத்து திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-நமது நிருபர்